நடிகர் விஜய் வீட்டில் இருந்து இன்னொரு இயக்குனர்…,டைரக்ஷனில் களமிறங்கும் சஞ்சய்…,

0
நடிகர் விஜய் வீட்டில் இருந்து இன்னொரு இயக்குனர்...,டைரக்ஷனில் களமிறங்கும் சஞ்சய்...,
நடிகர் விஜய் வீட்டில் இருந்து இன்னொரு இயக்குனர்...,டைரக்ஷனில் களமிறங்கும் சஞ்சய்...,

நடிகர் விஜயின் மகன் ஜேஸன் சஞ்சய் திரைப்பட இயக்கத்தில் ஈடுபடுவதை போல சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.

விஜய் மகன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் ஒரு பெரிய இடத்தை பிடித்திருக்கும் நடிகர் விஜய்க்கு கோலிவுட், மாலிவுட் மற்றும் பாலிவுட்டிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நடிகர் விஜய்க்கு ஜேஸன் சஞ்சய் மற்றும் திவ்யா என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் சஞ்சய் கனடாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் திரைப்படத்துறை சம்பந்தமான படிப்பை மேற்கொண்டு வந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில், நடிகர் விஜயின் மகன் ஜேஸன் சஞ்சய் தற்போது திரைப்பட இயக்கத்தில் ஈடுபடுவதை போல சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே, ஜேஸன் சஞ்சய் நடிகர் விஜயின் ‘வேட்டைக்காரன்’ திரைப்படத்தில் ஒரேயொரு பாடலுக்கு நடனமாடி இருப்பார். தொடர்ந்து, பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

உலகளவில் அதிக வசூல் குவித்த பட்டியலில் இணைந்த ‘அவதார்’.., இவ்வளவு தொகையா?…

ஆனால், நடிப்பதை விட திரைப்பட இயக்கத்தில் ஆர்வமுள்ள சஞ்சய், அந்த வாய்ப்பை மறுத்து இயக்கம் தொடர்பாக படித்து வருகிறார். அதன்படி விரைவில் இவரை ஒரு சினிமா இயக்குனராக ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். நடிகர் விஜயின் அப்பாவும், சஞ்சயின் தாத்தாவுமான எஸ்.ஏ.சந்திரசேகர் திரைப்பட இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here