உங்க காட்டுல தான் மழை.. ஜவான் படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

0
உங்க காட்டுல தான் மழை.. ஜவான் படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் ஜவான். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு வழங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தற்போது முன்னணி நடிகராக திகழ்கிறார். இவர் அறிமுகமாகிய தென்மேற்கு பருவக்காற்று படம் ரசிகர் மத்தியில் அதிக அளவில் பேசப்பட்டது. அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். இந்நிலையில் விக்ரம் வேதா படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பேமஸ் ஆனார் விஜய் சேதுபதி.

இதனை தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடித்தது மட்டுமின்றி அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடிப்பில் மிரட்டி இருப்பார். தற்போது அட்லி இயக்கத்தில் ஜவான் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் திரையிட இருக்கும் திரைப்படம் ஜவான்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, பிரியாமணி, யோகி பாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக காணப்படுகிறது. இப்படத்தை தயாரித்த ரெட் சில்லீஸ் நிறுவனம் நடிகர் விஜய் சேதுபதிக்கு சம்பளமாக 25 கோடி கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் விஜய் சேதுபதி தன் கேரியரில் இவ்வளவு சம்பளம் வாங்கியது இதுவே முதல் முறை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here