விஜய் சேதுபதியை உதைக்கும் ஒவ்வொரு நபருக்கும் ரூ.1001 சன்மானம் – அர்ஜுன் சம்பத் பதிவால் வெடித்தது சர்ச்சை!!

0

நடிகர் விஜய் சேதுபதியை எட்டி உதைப்பவருக்கு, உதைக்கும் ஒவ்வொரு உதைக்கும் சன்மானமாக ரூ.1001 வழங்கப்படும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

அடிக்கு சன்மானம்:

தமிழ் திரையிலகில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி.  நடிகர் கமலுக்கு வில்லனாக விக்ரம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு விமான நிலையத்தில் வைத்து மர்ம நபர் ஒருவர் இவரை பின்னிருந்து முதுகில் எட்டி உதைத்தார்.   பின்னர், அந்த நபரை கைது செய்த போலீசார் விசாரணைக்கு பின் விடுதலை செய்தனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்த முக்கிய பதிவு ஒன்றை இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.  அதாவது, தேவர் அய்யாவை பற்றி இழிவாக பேசியதால் தான், அவருக்கு இந்த அடி என்றும், மேலும், அவர் மன்னிப்பு  கோரும் வரை விஜய் சேதுபதியை எட்டி உதைப்பவருக்கு, உதைக்கும் ஒவ்வொரு உதைக்கும் சன்மானமாக ரூ.1001 வழங்கப்படும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏறப்டுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here