தனது வாய்ப்பை விஜய்சேதுபதிக்கு தாரை வார்த்த நடிகர் கமல் – இருந்தாலும் உங்களுக்கு பெரிய மனசு தான் போங்க!!

0

நடிகர் கமல் நடிக்கவிருந்த தலைவன் இருக்கிறான் படத்தின் கதாபாத்திரத்தில் சில மாற்றங்களை உருவாக்கி,அவருக்கு பதிலாக நடிகர் விஜய்சேதுபதியை நடிக்க வைக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கமல் கதையில் விஜய் சேதுபதி:

உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படம் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில், கமல் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளதாக நடிகர் கமல் அண்மையில் அறிவித்திருந்தார்.

Enewz Youtube டெலிக்ராம் – கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் – கிளிக் செய்யவும்

தலைவன் இருக்கிறான்  என்று பெயரிடப்பட்ட இந்த  படத்தில் இவர்  இயக்கி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியது. ஆனால், குறிப்பிட்ட சில மாறுதல்களுடன் இந்த படத்தில் நாயகனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும், இதில் கமல் முக்கிய கெட்டப்பில் நடிக்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை விஸ்வரூபம் படத்தின் படத்தொகுப்பாளர் மகேஷ் நாராயணன் இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here