
நாட்டு நாட்டு பாடலுக்கு RRR படக்குழு ஆஸ்கர் விருது பெற்றிருக்கும் நிலையில் அதற்கு நடிகர் விஜய் ஏன் வாழ்த்து கூறவில்லை என தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்ட வண்ணம் இருக்கின்றனர்.
நாட்டு நாட்டு பாடல்:
பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி படைப்பில் நடிகர் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற RRR திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ சாங் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே ‘கோல்டன் குளோப்’ விருதை இப்பாடல் பெற்றிருந்த நிலையில், நாட்டு நாட்டு’ பாடலுக்கும் ஆஸ்கர் விருது கிடைக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதன்படி ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது வாங்கியது. மேலும் ஆஸ்கர் விருது வாங்கியது பல முக்கிய பிரபலங்களும் படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். சமீபத்தில் கூட நடிகர் சூர்யா படக்குழுவினரை வாழ்த்தி ட்வீட் செய்திருந்தார். ஆனால் நடிகர் விஜய் மட்டும் வாழ்த்து கூறவில்லை, அவர் கண்டுகொள்ளாமல் இருக்கிறாரா இல்லையென்றால் பொறாமையா என்பது ஒன்றும் தெரியவில்லை என தெலுங்கு வட்டாரம் விமர்சித்து வருகிறது.
இதற்கு விஜய் ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். அதாவது விஜய் ரசிகர்கள் கூறியிருப்பதாவது, பொறாமையா? இங்கு யாரை பார்த்தும் எங்கள் தளபதிக்கு பொறாமை கிடையாது. அவர் பார்க்காத விருதா? சர்வதேச அளவில் விருது வாங்கி குவித்துள்ளார். அப்படிபட்ட எங்க அண்ணன் ஏன் RRR படக்குழுவை பார்த்து பொறாமைப்பட வேண்டும். அவர் LEO ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார். அவ்வளவு தான். அதற்காக வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசக்கூடாது. எங்க தளபதி RRR படக்குழுவுக்கு போன் செய்து வாழ்த்தியிருப்பார். யார் கண்டது என தெரிவித்துள்ளனர்.