Leo – Bloody Sweet வெளியான கொஞ்ச நேரத்திலேயே இத்தனை கோடி வியூசா.., கெத்து காட்டும் படக்குழுவினர்!!

0
Leo - Bloody Sweet வெளியான கொஞ்ச நேரத்திலேயே இத்தனை கோடி வியூசா.., கெத்து காட்டும் படக்குழுவினர்!!
Leo - Bloody Sweet வெளியான கொஞ்ச நேரத்திலேயே இத்தனை கோடி வியூசா.., கெத்து காட்டும் படக்குழுவினர்!!

லோகேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் LEO படத்தின் டைட்டில் ப்ரோமோ வீடியோ நேற்று வெளியான நிலையில் இதுவரை பார்த்த வியூஸ் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

LEO திரைப்படம்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். சமீபத்தில் இவர் நடித்த வாரிசு திரைப்படம் எதிர்பார்த்த வசூலை விட வாரி குவித்து வருகிறது. மேலும் இப்படத்துக்கு போட்டியாக களமிறங்கிய துணிவு படத்தை பின்னுக்கு தள்ளி வசூலில் No 1 ஆக இருந்து வருகிறது. இப்படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

லோகேஷ் இயக்கும் இப்படத்திற்கு வாரிசு ரிலீசுக்கு முன்னால் இருந்தே சோசியல் மீடியாவில் பேச்சுக்கள் ஆரம்பித்து விட்டது. ஆனால் வாரிசு ரிலீசுக்கு பிறகு தான் நான் இயக்கும் படத்தின் அப்டேட் தருவேன் என்று லோகேஷ் கூறிய படியே, அடுத்தடுத்து அப்டேட்களை கொடுத்து ரசிகர்களிடம் படத்தை குறித்து பெரிய ஹைப்பை கிரியேட் செய்துள்ளார்.

ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல., வந்தாச்சு 5 சூப்பர் அப்டேட்! உச்சகட்ட குஷியில் வாட்ஸ்அப் பயனர்கள்!!

மேலும் தளபதி ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோலிவுட் உலகமே காத்திருந்த டைட்டில் மற்றும் புரோமோ வீடியோ நேற்று மாலை 5 மணிக்கு படக்குழுவினர் வெளியிட்டனர். மேலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக ப்ரோமோ வீடியோ இருந்த நிலையில், படத்திற்கு LEO என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த நிலையில் புரோமோ வீடியோ குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, LEO ப்ரோமோ வீடியோ வெளியாகி 17 மணி நேரத்தில் 1.3 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here