லியோ படத்துல விஜய்க்கு மெயின் வில்லன் யாரு தெரியுமா? கடைசில இப்படி ஒரு ட்விஸ்ட் வைத்த லோகேஷ் கனகராஜ்!!

0
லியோ படத்துல விஜய்க்கு மெயின் வில்லன் யாரு தெரியுமா? கடைசில இப்படி ஒரு ட்விஸ்ட் வைத்த லோகேஷ் கனகராஜ்!!
லியோ படத்துல விஜய்க்கு மெயின் வில்லன் யாரு தெரியுமா? கடைசில இப்படி ஒரு ட்விஸ்ட் வைத்த லோகேஷ் கனகராஜ்!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் லியோ திரைப்படம் குறித்து ஒரு தகவல் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

லியோ திரைப்படம்:

தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த கொஞ்ச காலத்திலேயே தனக்கென்று ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் கடைசியாக எடுத்த விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு, இவரை சென்சேஷன் இயக்குனர் என்ற அளவுக்கு பெயரெடுத்து கொடுத்தது. தற்போது தளபதி விஜய்யை வைத்து லியோ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அது போக ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக மிஷ்கின், கெளதம் மேனன், சஞ்சய் தத், அர்ஜுன் ஆகியோர் நடித்து வரும் நிலையில், இதில் யாரு மெயின் வில்லனாக இருப்பார்கள் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் ரசிகர்கள் இவர் தான் மெயின் வில்லனாக இருப்பார் என்று ஒரு கருத்தை முன்வைத்து வருகின்றனர்.

சூர்யா 42 படத்தின் டீசர் எப்போது வெளியீடு தெரியுமா? அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட படக்குழுவினர்!

அதாவது விஜய்யின் லியோ திரைப்படம் LCU-ல் உருவாகி வருவதால், இப்படத்தில் சூர்யா தான் மெயின் வில்லனாக இருப்பார். ஆனால் ரோலக்ஸ் கதாபாத்திரம் படத்தில் வராது என்றும், அவருடைய பெயர் அல்லது குரல் மட்டுமே படத்தில் வரும் என்று கூறிகின்றனர். லோகேஷ் கனகராஜ் ஏதாவது மேஜிக் செய்திருப்பார் என்று தற்போது வரை ரசிகர்கள் அவர் மீது அளவுகடந்த நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here