Thursday, April 22, 2021

ஷூட்டிங்கிற்காக ஜார்ஜியா பறந்த தளபதி – வைரலாகும் புகைப்படங்கள்!!

Must Read

நடிகர் விஜய் நடிக்க இருக்கும் திரைப்படம் தான் “தளபதி 65”. இந்த திரைப்படத்திற்கான ஷூட்டிங்கிற்காக நடிகர் விஜய் வெளிநாடு சென்றுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

“தளபதி 65” திரைப்படம்

திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தான் நடிகர் விஜய். ரசிகர்களால் அன்பாக “தளபதி” என்று அழைக்கப்படுகிறார். வருடத்திற்கு ஒரு படத்தில் தான் நடிக்க வேண்டும் என்று தான் தேர்தெடுக்கும் கதையினை மிகவும் கவனமாக தேர்வு செய்கிறார்.

‘பாரதிகிட்ட இருக்க குழந்தை யாருனு கண்டுபிடிச்சு உன் முகத்திரையை கிளிக்கிறேன்’ – வெண்பாவிடம் சவால் விடும் துர்கா!!

கடந்த ஆண்டே இவரது “மாஸ்டர்” திரைப்படம் வெளியாக இருந்தது. ஆனால், பொது முடக்கம் காரணமாக இவர் திரைப்படம் வெளி வரவில்லை. அதே போல் இவரது திரைப்படம் திரை அரங்குகளில் தான் வெளி வர வேண்டும் என்று ரசிகர்கள் அனைவரும் கோரிக்கை வைத்து வந்தனர். இதனை அடுத்து “மாஸ்டர்” திரைப்படம் திரை அரங்குகளில் வெளியாகி சக்கை போடு போட்டது.

இப்படியாக இருக்க நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் “தளபதி 65” என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தினை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதே போல் பிக் பாஸ் மூலமாக பிரபலமான கவின், நடிகை பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடந்த சில நாட்களுக்கு முன்பாக தான், இந்த திரைப்படத்திற்கான பூஜை நடைபெற்றது. இதனை அடுத்து இந்த படத்திற்கான ஷூட்டிங் ஜார்ஜியா நாட்டில் நடைபெற இருக்கின்றது. இதற்காக நடிகர் விஜய் அங்கு செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ரைசாவிற்கு ஏற்பட்ட இந்த நிலைக்கு காரணம் யார்?? வைரலாகும் வீடியோ!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ரைசா தற்போது தான் மேற்கொண்ட சரும டிரிட்மென்ட் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். அது குறித்து தற்போது அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -