தளபதி விஜய்யுடன் மீண்டும் இணையும் இயக்குனர் பேரரசு – அப்டேட்டை கேட்டு கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0

ளபதி விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்ததாக அவர் வம்சி இயக்கத்தில் புதிய படம் நடிக்க ஏற்கனவே ஒப்பந்தமாகி இருந்தார். இந்நிலையில் இயக்குனர் பேரரசுவுடன் மற்றொரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய்

விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் தனது 65 ஆவது படமான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். அந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது முழுமையாக நிறைவடைந்தது. வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பீஸ்ட் திரைப்படம் வெளியாக உள்ளது.

விஜய்யை வைத்து படம் எடுக்க பல இயக்குனர்களும் போட்டி போட்ட நிலையில் உள்ளனர். பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் புதிய படம் நடிக்க விஜய் ஒப்பந்தமாகியுள்ளார். தளபதியின் இந்த 66 ஆவது படத்தை தமிழ் மற்றும் தெலுங்கிலும் வெளியிட உள்ளனர். இந்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ள நிலையில், விஜய் மீண்டும் மற்றொரு படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

திருப்பாச்சி, சிவகாசி ஆகிய ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் பேரரசுவுடன் விஜய் மீண்டும் கூட்டணி சேர உள்ளார். இந்த செய்தியை ரவி மரியா முன்னோட்ட வெளியீட்டு விழாவில் தெரிவித்துள்ளார். இதற்கான வேலைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது எனவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here