மோடியை கலாய்த்து தள்ளிய விஜய் ரசிகர்கள் – கோபத்தில் எச்சரிக்கை விடுத்த விஜய்!

0
மாஸ் கெட்டப்புடன் போஸ் கொடுத்த தளபதி 66 பட பிரபலங்கள் - இணையத்தில் லீக்கான ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்!!
மாஸ் கெட்டப்புடன் போஸ் கொடுத்த தளபதி 66 பட பிரபலங்கள் - இணையத்தில் லீக்கான ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்!!

சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரைலரில் விஜய் காவி நிற பேனரை கிழிப்பது போன்ற காட்சியில் மோடியின் புகைப்படத்தை வைத்து மார்பிங் செய்து கலாய்த்து வந்தனர். தற்போது அவர்களுக்கு விஜய் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மோடியை கலாய்த்த நெட்டிசன்கள்

நேற்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் எச்சரிக்கை விடுத்து ஒரு நோட்டிஸை சட்ட ரீதியாக அனுப்பியுள்ளனர். அதாவது விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள பிஸ்ட் திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. அந்த ட்ரைலரில் விஜய் காவி நிற பேனரை கிழிப்பது போல காட்சிகள் இடம்பெற்றிந்தன.

ஆனால், நெட்டிசன்கள் பலரும் அந்த காட்சியை மார்பிங் செய்து மோடி புகைப்படத்தை விஜய் கிழிப்பது போல பல மீம்களை வெளியிட்டு கலாய்த்து வருகின்றனர். இதனால் பாஜகவை கட்சியை சேர்ந்த ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும், இது குறித்தான மீம்களை வெளியிடும் சமூக வலைதள பக்கங்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது போன்ற மீம்களை வெளியிட வேண்டாம் என விஜய் தரப்பில் இருந்து எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதாவது, அரசு பதவிகளில் உள்ள எந்த கட்சி தலைவர்களை பற்றியும் அவதூறாக பேச வேண்டாம். ஏற்கனவே இது போன்ற மீம்களை வெளியிட கூடாது என எச்சரிக்கப்பட்டிருந்தது. இதற்கு மேலும், அரசியல் தலைவர்களை அவதூறாக பேசினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இயக்கத்தை விட்டு வெளியேற்றப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது..

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here