நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – நள்ளிரவில் திடீர் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள்!!

0

நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலையடுத்து நள்ளிரவில் திடீரென அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விஜய் வீட்டில் வெடிகுண்டு:

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் தளபதி விஜய்.  தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், சென்னையில் உள்ள அவரது வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்துள்ளது.  இதனை அடுத்து, திடீரென நள்ளிரவில் அதிகாரிகள் நடிகர் விஜய் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.

தொடர் சோதனையை அடுத்து, அங்கு வெடிகுண்டு ஏதும் இல்லை, என்பதும் இது திட்டமிடப்பட்ட வதந்தி என்று போலீசார் அறிவித்தனர்.  இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.வதந்தியை கிளப்பி தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்திய அந்த நபர் இதுவரை பல அரசியல் தலைவர்கள் வீட்டில் இது போன்ற வதந்தியை கிளப்பியுள்ளார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here