நண்பர்களுடன் வீடியோகால் பேசும் நடிகர் விஜய் – வைரல் போட்டோ!!

0
vijay video call
vijay video call

நண்பர்கள் தினம் உலகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நாளில் பொதுவாக நண்பர்கள் ஒன்று கூடி வெளியே சென்று வருவதும் வாழ்த்துக்கள் கூறுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது வழக்கம். கொரோனா தொற்று காரணாமாக மக்கள் வெளியில் செல்லத நிலையில் தங்களது வாழ்த்துக்களை வீடியோ கால் மூலம் பகிர்ந்துகொண்டனர். இந்நிலையில் தளபதி விஜய்யும் நண்பர்களை தின வாழ்த்தை வீடியோ கால் மூலம் தனது நண்பர்களுக்கு தெரிவித்த புகைப்படம் சமூகவலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆகஸ்ட் முதல் ஞாயிறு நண்பர்கள் தினம்

vijay video call
vijay video call

ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. நண்பர்கள் தினத்தன்று நண்பர்கள் ஒன்று சேர்ந்து வெளியில் செல்வது நிகழ்ச்சி நடத்துவது கேளிக்கை கொண்டாட்டம் என வழக்கமாக செய்துவருவர்காள், ஆனால் லாக்டவுன் சூழ்நிலையில் அப்படி யாராலும் வெளியே சென்று கொண்டாட முடியாமல் இருக்கின்றனர். இதனால் வீடியோ கால் மூலம் நண்பர்கள் அனைவரும் குழுவாக பேசி மகிழ்ந்து வந்தனர்.

விஜய் நண்பர்களுடன் வீடியோ கால் 

vijay friends
vijay friends

இந்நிலையில் நடிகர் விஜய் தனது குழந்தை பருவத்தில் இருந்து ஒரே நட்பு வட்டாரத்தில் இருந்து வருகிறார். அந்த வகையில் சஞ்சீவ், ஸ்ரீநாத் உள்ளிட்ட அனைவருடனும் வீடியோ கால் மூலமாக நண்பர் தினத்தை கொண்டாடினார்.தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.நண்பர்களுடன் வீடியோ காலில் பேசி மகிழ்ந்துள்ளார். நடிகர் விஜய்யின் நண்பரும், சின்னத்திரை நடிகருமான சஞ்சய் இந்த புகைப்படத்தை தனது சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார். அதில் விஜய்யின் கல்லூரி நண்பர்கள் இருக்கின்றனர். பொதுவாகவே விஜய் எப்போதும் அதிகம் யாருடனும் பேச மாட்டார், ஷுட்டிங் ஸ்பாட்டில் தான் உண்டு வேலை உண்டு என அமைதியாகவே இருப்பார் என பொதுவாகவே பல பிரபலங்கள் பேட்டிகளில் கூறியிருப்பதை நாம் கேட்டிருப்போம்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் அவரது நண்பர்களுடன் அவர் அப்படியே ஆப்போசிட் ஆக இருப்பார் என்றும் சொல்லப்படுவது உண்டு.அப்படி விஜய் தன்னுடைய கல்லூரி காலங்களிலிருந்து நண்பர்கள் கேங் வைத்திருக்கிறார். அவர்களுடன் அடிக்கடி நேரத்தையும் செலவிட அவர் மறப்பதில்லை. இதற்கு முன்பு வெளிநாடுகளுக்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்று அந்த புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி இருக்கின்றன.தற்போது நண்பர்களுடன் சிரித்து பேசி இருக்கும் புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இணையத்தில் வைரலாகும் அந்த புகைப்படங்கள் விஜய் உடன் இருக்கும் பழைய புகைப்படங்களை பதிவிட்டு சஞ்சீவ் கூறியிருந்ததாவது.. “முன்பு இருந்தது போல நாம் அடிக்கடி சந்திப்பது இல்லை. ஆனாலும் நம் அன்பு அதே வலிமையுடன் தான் இருக்கிறது. ஹேப்பி ஃப்ரெண்ட்ஷிப் டே கைஸ்” என அவர் கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here