ஆல் ஏரியாவுல ஐயா கில்லிடா.., விஜய்க்கு கிடைத்த உயர்ந்த அங்கீகாரம்.., கெத்து காட்டும் தளபதி ரசிகர்கள்!!

0
ஆல் ஏரியாவுல ஐயா கில்லிடா.., விஜய்க்கு கிடைத்த உயர்ந்த அங்கீகாரம்.., கெத்து காட்டும் தளபதி ரசிகர்கள்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நுழைந்த ஆரம்ப காலகட்டத்தில் கடுமையான விமர்சனங்களை பெற்று, அந்த விமர்சனங்களை தனது வெற்றிக்கு முதல் படியாக்கி அயராது உழைத்து தற்போது அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற நிலைக்கு உயர்ந்தவர் தான் நடிகர் விஜய். இவர் சினிமா கேரியரில் சில தோல்விகளை கண்டு இருந்தாலும் பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து சாதனை படைத்திருக்கிறார்.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்திருந்த பாக்ஸ் ஆபீஸ் கலெக்சனை உடைத்தெறிந்த ஒரே நடிகர் தளபதி விஜய் என்றால் அது மிகையாகாது. தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பில் உருவாகி வரும் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் வருகிற ஜனவரி 11ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் தளபதி விஜய் தனது நடிப்பாலும், நடனத்தாலும் பல டாப் லிஸ்ட்களில் முதலிடத்தை பிடித்துள்ளார். அந்த வகையில் பாக்ஸ் ஆபீஸ் ஹீரோ ஆப் கிங் என்ற பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். மேலும் Man of simplicity in tamilnadu பட்டியலிலும், தென்னிந்திய தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களிலும் பர்ஸ்ட் இடத்தை பிடித்துள்ளார்.

வாரிசு படத்தில் நடித்த ராஷ்மிகாவுக்கு இத்தன கோடி சம்பளமா?? ஒரே மார்க்கெட்ல எங்கையோ போயிட்டீங்க!!!

இப்படி சினிமா துறையில் எல்லா இடத்திலும் முதலிடமாக இருந்து வருகிறார் தளபதி விஜய். மேலும் இவர் படத்திற்கு பல தடைகள் வந்தாலும் கூட அதை எதையும் பொருட்படுத்தாமல் அரசியல் சம்பந்தப்பட்ட வசனங்களை பேசி அரங்கத்தை அதிர வைத்து வருகிறார். இதுவே இவரின் வெற்றிக்கு காரணமாக இருந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here