மப்பு  தலைக்கேறி  தலைகால் புரியாமல் ஆடிய விஜய் தேவரகொண்டா  – ஷூட்டிங்கை ரத்து செய்த படக்குழு!!

0
மப்பு  தலைக்கேறி  தலைகால் புரியாமல் ஆடிய விஜய் தேவரகொண்டா  - ஷூட்டிங்கை ரத்து செய்த படக்குழு!!

விஜய் தேவரகொண்டா தான் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு,  ஷூட்டிங் சென்றதால் படக்குழு அன்றைய நாளின்  படப்பிடிப்பை ரத்து செய்து விட்டதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நடிகர் பகீர் :

தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகில்  முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் விஜய் தேவரகொண்டா. கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம், மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட இவர்  தமிழில் நோட்டா உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தற்போது, அவர் லிகர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அண்மையில், நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த இவர், இரவில் முக்கியமான நிகழ்வுக்கு சென்ற போது அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாகவும், அதிகாலை வரை போதை தெளியாததால்  அப்படியே போதையோடு ஷூட்டிங் ஸ்பாட் சென்றதாக தெரிவித்தார். அங்கேயும் தனக்கு, சரக்கு அடிக்க வேண்டிய சீன் வைத்ததாகவும் இதனால் உச்சகட்ட போதை தலைக்கேறி வசனம் சொல்லாமல் உளறிக் கொட்டிய தாகவும் தெரிவித்தார்.

இதனால் படக்குழுவே அன்றைய நாள் ஷூட்டிங்கை  ரத்து செய்து விட்டதாக பேட்டியில் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் தேவரகொண்டா தனக்கு போதை பழக்கம் இருப்பதை, வெளிப்படையாக தெரிவித்தது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here