கடைசி நேரத்தில் கால்லை வாரிய விஜய் தேவரகொண்டா.. தலையில் துண்டை போட்ட இயக்குனர்!

0
கடைசி நேரத்தில் கால்லை வாரிய விஜய் தேவரகொண்டா.. தலையில் துண்டை போட்ட இயக்குனர்!

லைகர் பட இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க இருந்த விஜய் தேவரகொண்டா லைகர் பட தோல்வியால் மௌனம் சாதிப்பதாக கூறப்படுகிறது.

விஜய் தேவரகொண்டா:

தெலுங்கில் தனது நடிப்பை ஆரம்பித்து தற்போது இளம் நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் நடித்த அர்ஜுன் ரெட்டி திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று அனைத்து கன்னிப் பெண்களின் மனதில் தனக்கென இடத்தை பிடித்து கொண்டார். மேலும் இவருக்கு அடுத்தடுத்து படங்கள் வெளியாக இருக்கின்றன.

இதை தொடர்ந்து இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கி அண்மையில் வெளியான லைகர் திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது மட்டுமின்றி மோசமான வசூலை பெற்று பிளாப் ஆனது. இந்நிலையில் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஜன கன மண என்கிற அடுத்த படத்தில் விஜய் தேவரகொண்டா மௌனம் சாதிப்பதாக கூறப்படுகிறது.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – அடுத்த சுற்றுக்கு முன்னேறிய டென்னிஸ் ஜாம்பவான் நடால்!

அதாவது கடந்த மாதம் 25ம் தேதி டோலிவுட்டில் கொண்டாடப்பட்ட இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கிய லைகர் திரைப்படம் வெளியாகி பட தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதனால் இப்படத்திற்காக வாங்கிய சம்பளத்தை இயக்குனர் பூரி ஜெகன்நாத்தும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் திருப்பி கொடுத்துள்ளார்கள்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதை தொடர்ந்து இயக்குனர் பூரி ஜெகன்நாத் அடுத்த இயக்கும் படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா கமிட் ஆகி இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் லைகர் படம் பிளாப் ஆனதை தொடர்ந்து இந்த படத்தை விஜய் தேவரக்கொண்டா கிடப்பில் போட்டதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here