23 ஆண்டுகளுக்கு முன் விஜய் இப்படி இருந்தாரா? இதுவரை நீங்கள் பார்க்காத ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ!!

0

நடிகர் விஜய் நடிப்பில் 23 ஆண்டுகளுக்கு முன் வெளியான ஒரு ஹிட் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம், தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரல் போட்டோ :

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர், இளைய தளபதி விஜய். இவர் நடிப்பில், கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் துள்ளாத மனமும் துள்ளும். சிம்ரன், மணிவண்ணன், தாடி பாலாஜி உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர்.படத்தின் கதையம்சமும், இதில் இடம் பெற்றிருந்த பாடல்களும் இன்றும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கிறது.

முதலில் இந்த படத்தில், வேறு பிரபலங்கள் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர்கள், அதில் நடிக்க முடியாமல் போனதால் விஜய் இந்த படத்தில் நடித்தார். தற்போது படம் வெளியாகி 23 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் அங்கிருந்த குழந்தைகளுடன் விஜய் எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், 23 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட ஷூட்டிங் ஸ்பாட் போட்டோவா இது? என வாய் பிளந்து பார்த்து வருகின்றனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here