விஜய்யின் பீஸ்ட் பட பாடல் வெளியாவதில் சிக்கல் – அதற்கு காரணம் இந்த படம் தான்??

0

நடிகர் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் பாடல் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இது வெளியாவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது.

பீஸ்ட் பாடலுக்கு சிக்கல்:

விஜய் நடிப்பில் , இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் பீஸ்ட். படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் மும்மரமாக நடந்து வரும் நிலையில், இந்த படம் வருகிற பொங்கலின் போது திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த படத்தின் பணிகள் கிட்டத்தட்ட 70% முடிந்துவிட்ட நிலையில், வருகிற தீபாவளியின் போது இந்த படத்தில் இருந்து ஒரு பாடல் வெளியிடப்படும் என அண்மையில் படக்குழு அறிவித்தது.

ஆனால், தற்போது படத்தின் முதல் பாடல் திட்டமிட்டபடி வெளியாகுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  அதாவது, பீஸ்ட் படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம், ரஜினியின் அண்ணாத்த படத்தை தயாரித்துள்ளது.  இந்த படம் நாளை மறுநாள் வெளியாகும் நிலையில், பீஸ்ட் பாடல் வெளியானால் தேவையில்லாத கவனச்சிதறல் ஏற்படும் என்பதற்காக பாடல் வெளியீடு தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here