நானே வருகிறேன்.., சிகிச்சைக்கு பின் நடிகர் விஜய் ஆண்டனி உருக்கம்!!

0
நானே வருகிறேன்.., சிகிச்சைக்கு பின் நடிகர் விஜய் ஆண்டனி உருக்கம்!!
நானே வருகிறேன்.., சிகிச்சைக்கு பின் நடிகர் விஜய் ஆண்டனி உருக்கம்!!

படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய நடிகர் விஜய் ஆண்டனி தற்போது காயத்தில் இருந்து பூரணமாக குணமடைந்துள்ளார். சிகிச்சைக்கு பின் அவர் வெளியிட்ட உருக்கமான பதிவு ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

நடிகர் விஜய் ஆண்டனி

தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான விஜய் ஆண்டனி படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி, தற்போது முழுமையாக குணமடைந்துள்ளார். நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் இருந்து எக்கச்சக்கமான வரவேற்புகளை பெற்ற ஒரு முக்கியமான திரைப்படம் ‘பிச்சைக்காரன்’. இந்த படத்துக்கு கிடைத்த ஏக ஆதரவை தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனி ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படத்தை தற்போது இயக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வந்தது. அந்த படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்தில் சிக்கிய நடிகர் விஜய் ஆண்டனி மூக்கு மற்றும் தாடையில் பலத்த அடி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சையில் இருந்து பூரணமாக குணமாகிய அவர், தனக்கு ஆதரவு அளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி கூறி சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆஸ்கார் இறுதி பட்டியலில் RRR பாடல் – இத எதிர்பார்க்கலையே!!

அந்த பதிவில், படப்பிடிப்பில் ஏற்பட்ட காயங்களில் இருந்து மீண்டுவிட்டதாகவும், விரைவில் எல்லாருடனும் பேச வருவதாகவும் கூறியுள்ளார். மேலும், அவரது உடல் நலம் குறித்து விசாரித்த அனைத்து நல் உள்ளங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி கூறி அவர் வெளியிட்ட பதிவு ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here