விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி., இப்ப எப்படி இருக்கார் தெரியுமா? தயாரிப்பாளரின் முக்கிய பதிவு!!

0
விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி., இப்ப எப்படி இருக்கார் தெரியுமா? தயாரிப்பாளரின் முக்கிய பதிவு!!
விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி., இப்ப எப்படி இருக்கார் தெரியுமா? தயாரிப்பாளரின் முக்கிய பதிவு!!

விஜய் ஆண்டனி வெளிநாட்டில் உள்ள ஒரு தீவில், பிச்சைக்காரன் 2 ஷூட்டிங்கில் இருந்த போது விபத்தில் சிக்கி மருத்துவமனையில், சிகிச்சையில் இருந்து வரும் நிலையில் அவர் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

வெளியான தகவல்:

தமிழ் சினிமாவில் இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என பன்முகத் திறமையுடன் வலம் வருபவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம், மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதைத்தொடர்ந்து இவரே இயக்கி நடிக்கும் பிச்சைக்காரன் 2 படத்தின் ஷூட்டிங் மலேசியாவின் லங்காவி தீவில் நடைபெற்று வந்தது. படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு கொண்டிருந்தபோது, நடிகர் விஜய் ஆண்டனி கடும் படகு விபத்தில் சிக்கினார். அவரை மீட்டு பட குழுவினர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

தனுஷின் துள்ளல் ஆட்டத்துடன் வெளியான “நாடோடி மன்னன்” பாடல்.., இணையத்தில் லைக்ஸ் குவியும் வீடியோ!!

இந்த நிலையில், இவர் உடல் நிலை குறித்த தகவலை படத்தின் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் வெளியிட்டுள்ளார். அதாவது, விஜய் ஆண்டனி மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவும், அவரை குடும்பத்தினர் கவனித்து வருவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, நடிகர், விஜய் ஆண்டனி விரைவில் குணமாகி வர வேண்டும் என பலரும் வேண்டுதல் வைத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here