சினிமாவிற்கு மீண்டும் ரீஎன்ட்ரி – ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரத்தில் சரத்குமார்!!

0

நடிகர்  விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய  கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளதாக அறிவிப்பு கிடைத்துள்ளது.

முக்கிய ரோலில் சரத்:

தமிழ் திரை உலகில் நடிகர் மற்றும் இயக்குனர் என  பல பரிமாணங்களில் திகழ்பவர் விஜய் ஆண்டனி.  இவரது நடிப்பில் உருவான பிச்சைக்காரன் என்ற படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.  இதனையடுத்து, அதன் அடுத்த பாகத்தை இயக்கி நடித்து வருகிறார்.

இது போக இன்னும் மூன்று படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில், பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் மழை பிடிக்காத மனிதன் என்ற  படத்தில் நடிகராக இவர் நடித்து வந்தார். இதனை அடுத்து, இந்த படத்தில் கதாநாயகனுக்கு இணையான வேடத்தில் நடிக்க நடிகர் சரத்குமார் கமிட்டாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here