தளபதி நம்பிக்கையை உடைத்த வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு.., கடைசில இப்படி பண்ணிடீங்களே!!

0
தளபதி நம்பிக்கையை உடைத்த வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு.., கடைசில இப்படி பண்ணிடீங்களே!!
தளபதி நம்பிக்கையை உடைத்த வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு.., கடைசில இப்படி பண்ணிடீங்களே!!

வாரிசு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜ் மீது நடிகர் விஜய் கோபத்தில் இருப்பதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது.

வாரிசு திரைப்படம்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகர் விஜய். தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பில் சென்டிமென்ட் கலந்த ஆக்சன் திரைப்படம் ஆக உருவாகி உள்ளது வாரிசு திரைப்படம். இப்படம் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகி தற்போது வரை வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் தமிழகத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 76 கோடி வசூலையும், உலக அளவில் 150 கோடி வசூலையும் பெற்றிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் நடிகர் விஜய் வாரிசு படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு மீது கடும் கோபத்தில் இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவான நிலையில் ஒரே நாளில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். ஆனால் ஜனவரி 11-ம் தேதி தமிழ் மட்டுமே உலகம் எங்கும் ரிலீஸ் ஆனது. ஆனால் தெலுங்கு வெர்ஷன் மட்டும் ரிலீஸ் ஆகவில்லை.

தேசிய விருது இயக்குனருடன் கூட்டணி வைக்கும் சூர்யா.., வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!

அதற்கு காரணம் தெலுங்கு வட்டாரங்களில் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி மற்றும் பால கிருஷ்ணாவின் படங்கள் வெளியானதால் வாரிசுக்கு தியேட்டர் கிடைக்கவில்லை என்று ஜனவரி 14-ஆம் தேதி வெளியிட இருப்பதாக தில் ராஜு அறிவித்திருந்தார். இதனால் நடிகர் விஜய் அவர் மீது கோபத்தில் இருப்பதாக சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது. இருப்பினும் தமிழில் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ வில் தயாரிப்பாளர் தில் ராஜ் மற்றும் இயக்குனர் வம்சி ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here