வாரிசு ஆடியோ லாஞ்சில் கலந்து கொள்ளாத விஜய் மனைவி சங்கீதா..,வெளியான உண்மை காரணம்!!

0
வாரிசு ஆடியோ லாஞ்சில் கலந்து கொள்ளாத விஜய் மனைவி சங்கீதா..,வெளியான உண்மை காரணம்!!
வாரிசு ஆடியோ லாஞ்சில் கலந்து கொள்ளாத விஜய் மனைவி சங்கீதா..,வெளியான உண்மை காரணம்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் தனது நடிப்பாலும் மற்றும் நடனத்தினாலும் எக்கச்சக்க ரசிகர்களைக் கொண்டவர் தான் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் உருவான வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 11 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இந்த நேரத்தில் நடிகர் விஜய் சங்கீதாவை விவாகரத்து செய்ததாக சோசியல் மீடியாவில் தகவல் தீயாய் பரவி வந்தது. அதற்குக் காரணம் சமீபத்தில் நடந்த வாரிசு இசை வெளியீட்டு விழாவில் மனைவி சங்கீதாவை விஜய் அழைத்து வரவில்லை.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதுமட்டுமின்றி இயக்குனர் அட்லி மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கும் சங்கீதா வரவில்லை. விஜய் மட்டுமே இரண்டு நிகழ்ச்சிகளும் கலந்து கொண்டார். இதை வைத்து நெட்டிசன்கள் விஜய் சங்கீதாவை விவாகரத்து செய்து விட்டார் என்று சோசியல் மீடியாவில் பரப்பி விட்டனர். மேலும் விஜய்யின் விக்கிப்பீடியாவில் சங்கீதாவிடம் விவாகரத்து ஆனதாக எடிட் செய்து சர்ச்சையை பெரிதாக்கினார்கள். இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் சங்கீதா ஏன் வரவில்லை என்று குறித்து முக்கிய தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

டாப் தொடருக்கு தாவிய பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலம்., இனி இவருக்கு பதில் இவர் தான்! அப்டேட் லீக்!!

அதாவது இந்த விவாகரத்து குறித்து விஜய்யின் சொந்தக்காரர்களிடம் விசாரித்த போது சங்கீதா, மகள் மகனுடன் அமெரிக்காவில் அப்பா வீட்டில் இருந்து வருகிறார் என்று கூறப்படுகிறது. விஜயின் விவாகரத்து குறித்து வெளிவந்த எந்த தகவலும் உண்மையானது அல்ல என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இப்படி விஜயின் வாரிசு படம் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது அவர் குறித்து வெளிவந்த இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here