முக்கிய பிரபலத்தை இழிவாக பேசிய தளபதி விஜய்.., வெளிவந்த உண்மை சம்பவம்!!

0
விஜய் நழுவ விட்டு மெகா ஹிட் திரைப்படம்.., சோகத்தில் புலம்பும் தளபதி ரசிகர்கள்!!
விஜய் நழுவ விட்டு மெகா ஹிட் திரைப்படம்.., சோகத்தில் புலம்பும் தளபதி ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில் பல ஹீரோக்கள் தங்களது சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றனர். அந்த வகையில் பல ஹிட் படங்களை கொடுத்த இளைய தளபதி விஜய்க்கு பல ரசிகர் பட்டாளம் உள்ளனர். தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தளபதி விஜய் என்ன தான் புகழ் உச்சியில் இருந்தாலும் அவரை எதிர்த்து கசப்பான விமர்சனங்களும் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதில் ஒன்றாக இருப்பது தான் போக்கிரி படப்பிடிப்பின் போது நடிகர் நெப்போலியனுடன் நடந்த பிரச்சனை. இந்த சம்பவத்தை இன்றும் மறக்கவில்லை என்று நடிகர் நெப்போலியன் பல இடங்களில் கூறியுள்ளார்.

இயக்குனர் பிரபுதேவா இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து கடந்த 2007ம் ஆண்டு வெளியான திரைப்படம் போக்கிரி. இந்த படத்தின் படப்பிடிப்பு போது நடிகர் விஜய் உடல் சோர்வு ஏற்பட்டு தனது கேரவன் வாகனத்தில் ரெஸ்ட் எடுத்துள்ளார். அப்பொழுது நெப்போலியனை சந்திக்க வந்த நண்பர்கள் விஜய்யுடன் போட்டா எடுக்க ஆசைப்பட்டுள்ளனர்.

அதன் பின்னர் நெப்போலியன் நான் அழைத்து செல்கிறேன் என்று கூறி கேரவன் வாசலுக்கு சென்றுள்ளார் . அப்போது அவரை உள்ளே அனுமதிக்காமல் விஜயின் பவுன்சர் தடுத்துள்ளார். அந்த நேரத்தில் வெளியில் ஏற்பட்ட சத்தத்தினால் நடிகர் விஜய் வெளியே வந்து நடிகர் நெப்போலியனை, ” சார் உங்களுக்கு அறிவு இருக்கா” என்று திட்டியுள்ளார். இந்த சம்பவத்தில் இருந்து விஜயுடன் பேச்சு வார்த்தையை நிறுத்தி கொண்டார் நெப்போலியன். மேலும் அவரது எந்த படங்களையும் நான் பார்ப்பதில்லை என்று எல்லா பேட்டிகளிலும் கூறி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here