தளபதி 67-இல்  களமிறங்கும் பிரபல  இயக்குனர்..,  அப்போ பெரிய  சம்பவமே  இருக்கு!!

0
தளபதி 67-இல்  களமிறங்கும் பிரபல  இயக்குனர்..,  அப்போ பெரிய  சம்பவமே  இருக்கு!!
தளபதி 67-இல்  களமிறங்கும் பிரபல  இயக்குனர்..,  அப்போ பெரிய  சம்பவமே  இருக்கு!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 67 படத்தை குறித்து இணையத்தில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

தளபதி 67:

தற்போதைய சூழ்நிலையில் சோசியல் மீடியாவை புரட்டி போட்டு கொண்டிருக்கும் செய்தி என்றால் அது தளபதி 67 பற்றி தான். எந்த இணையதள பக்கத்தில் சென்றாலும் ரசிகர்கள் தளபதி 67 படத்தின் அப்டேட் குறித்து தான் பேசி வருகிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பு தீனிக்கு பசியாற்றும் விதமாக நேற்று படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், வசனம், எடிட்டிங், இசை, டான்ஸ் என யார் யார் பண்ண போகிறார்கள் என்ற விவரத்தை வெளியிட்டனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது அடுத்தடுத்து அப்டேட்களை படக்குழுவினர் வெளியிட்டு தளபதி ரசிகர்களை சந்தோஷத்தில் மூழ்க வைத்து வருகின்றனர். சமீபத்தில் இப்படத்தில் கேஜிஎப் வில்லன் சஞ்சய் தத் தளபதி 67ல் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறி வந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதேபோல் நடிகர் திரிஷாவும் தளபதி 67 ல் இருக்கிறார் என்று அறிவித்துள்ளனர்.

நீங்க நல்லவருன்னு தெரியும்.., ஆனா இந்தளவுக்குனு தெரியாம பேச்சே ராக்கி பாய்.., யாஷ் குறித்து பிரபல நடிகர் ட்வீட்!!

தற்போது ட்விட்டர் பக்கத்தில் #Trisha ஹாஸ் டாக் ட்ரெண்டாகி வருகிறது. இந்த நிலையில் புதிதாக தளபதி 67 ல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வடசென்னை, வை ராஜா வை, எதிர் நீச்சல் போன்ற படங்களில் நடித்த நடிகை பிரியா ஆனந்த் நடிக்க இருக்கிறார்.

இதுகுறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் தளபதி 67 படத்தின் ஷூட்டிங்கிற்காக படக்குழுவினர் காஷ்மீருக்கு தனி விமானம் பிடித்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மீண்டும் ஒரு நபர் இணைந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது டான்ஸ் மாஸ்டர் சாண்டி தளபதி 67ல் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தளபதி 67 படக்குழுவினர் தொடர்ந்து புதுப்புது அப்டேட்களை வெளியிட்டு வரும் நிலையில், மீண்டும் ஒரு ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளனர். அதாவது இதற்கு முன்னர் வில்லனாக சஞ்சய் தத் இருப்பதாக அறிவித்த நிலையில், தற்போது இயக்குனர் மிஷ்கின் தளபதி 67 ல் இருப்பதாக அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இது சும்மா ட்ரைலர் தான்மா. மெயின் பிக்சர் பிப்ரவரி 1,2,3ல் ஒரு நாள் வெளியாகும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here