
நடிகர் விஜய் தனது மனைவியை உதறி தள்ளி விட்டு, நடிகை கீர்த்தி சுரேஷுடன் நெருக்கம் காட்டுவதாக கூறி விஜய்க்கு எதிராக, ட்விட்டரில் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
ட்ரெண்டாகும் ஹேஷ்டேக் :
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக வலம் வரும் தளபதி விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா குறித்த, சில தேவையற்ற வதந்திகள் சமீப காலமாக வைரலாகி வருகிறது. விஜய் தனது மனைவி சங்கீதாவை பிரிந்து விவாகரத்து வாங்கி விட்டதாகவும், இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும் சொல்லப்பட்டது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அதனால்தான் தளபதியின் வாரிசு பட ஆடியோ லான்ச் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கூட அவர் கலந்து கொள்ளவில்லை எனவும் சொல்லப்பட்டது. இது ஒரு புறம் இருக்க, நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவை பிரிந்து, நடிகை கீர்த்தி சுரேஷுடன் நெருக்கம் காட்டுவதாக தகவல் கசிந்துள்ளது.
இது குறித்த, எடிட் செய்யப்பட்ட பல்வேறு மீம் போட்டோக்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல், சங்கீதாவுக்கு ஆதரவாக #Justice for sangeetha என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.
விஜய்க்கு எதிராக கிளம்பியுள்ள இந்த சர்ச்சைக்கு, இதுகுறித்த எந்த மறுப்பையும் இதுவரை அவர் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது முழுக்க முழுக்க வதந்தி தான் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். முக்கிய நடிகர் குறித்து இப்படி தகவல் வைரலாவது வழக்கமான ஒன்று தான். ஆனால் இது ட்விட்டரில் ட்ரெண்டிங்காக போயிக்கொண்டிருப்பது தான் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.