‘தளபதி 67’ திரைப்படத்தில் இணைந்த பிரபலங்கள்.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது….,

0
'தளபதி 67' திரைப்படத்தில் இணைந்த பிரபலங்கள்.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது....,
'தளபதி 67' திரைப்படத்தில் இணைந்த பிரபலங்கள்.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது....,

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 67’ திரைப்படத்தில் பணியாற்றும் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தளபதி 67 திரைப்படம்

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டு வரும் ‘வாரிசு’ திரைப்படம் ரசிகர்களுக்கு சிறந்த பொங்கல் பண்டிகை விருந்தாக அமைந்திருந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்திற்கான அப்டேட் இன்று வெளியாகியுள்ளது. அந்த வகையில், நடிகர் விஜய் நடிக்கும் 67 ஆவது திரைப்படத்தை ‘மாஸ்டர்’ இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த திரைப்படம் முழுமையான லோகேஷ் கனகராஜின் பாணியில் தயாரிக்கப்பட உள்ளது. இத்திரைப்படத்தில் நடிகர் பகத் பாசில், த்ரிஷா, சிம்பு, ப்ரித்வி ராஜ் ஆகியோர் நடிக்க இருப்பதாக சில தகவல்கள் காத்து வாக்கில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், விஜயின் புதிய திரைப்படத்தை தயாரித்து வரும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் ‘தளபதி 67’ குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது.

கூத்தும் கும்மாளமுமாக அமீர்-பாவனி.., அடேங்கப்பா, ஒரே ஜாலி தான் போலயே!!

அதன்படி, மாஸ்டர் மற்றும் வாரிசு படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து 3 ஆவது முறையாக விஜயுடன் கைகோர்த்துள்ளது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம். இத்திரைப்படத்தில் அனிருத் இசையமைப்பாளர் என்றும் மாஸ்டர் தினேஷ் நடன இயக்குனராக பணியாற்ற இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘தளபதி 67’ என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 2 அன்று தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here