இளைய தளபதியுடன் கூட்டணி சேரும் National Crush – அப்டேட் கேட்டு குத்தாட்டம் போட்ட ரசிகர்கள்!!

0

நடிகர் விஜய்யின் 66வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் அந்த படத்தில் அவருக்கு நாயகியாக ராஷ்மிகா மந்தனா இணைய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வெளியாகிய அப்டேட் :

நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் டப்பிங் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாக செய்திகள் பரவி வந்தது. ஒட்டுமொத்த பணிகளும் நிறைவடைந்த பின் வருகின்ற கோடை விடுமுறையில் படம் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில், நடிகர் விஜய் தனது 66வது படத்தில், தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் இணைய உள்ளதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த படத்தில் அவருக்கு நாயகியாக, கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார் என பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது இதனை அவர் மறுத்து விட்டார். இதனை அடுத்து, இந்த படத்தில் அவருக்கு நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வரவில்லை.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here