சூனா பானா கதாபாத்திரத்தை உருவாக்கியது “எதிர் நீச்சல்” சீரியல் நடிகர் தானா?.., இது என்னடா புது ட்விஸ்ட்!!

0
சூனா பானா கதாபாத்திரத்தை உருவாக்கியது
சூனா பானா கதாபாத்திரத்தை உருவாக்கியது "எதிர் நீச்சல்" சீரியல் நடிகர் தானா?.., இது என்னடா புது ட்விஸ்ட்!!

வடிவேலுவின் சூனா பானா கதாபாத்திரத்தை உருவாக்கிய இயக்குனர் குறித்து முக்கிய தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

பாரதி கண்ணன்:

பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு படம் வெற்றி கனியை சுவைக்கிறது என்றால், ஒன்று படத்தின் கதை அற்புதமாக இருந்திருக்கும், இல்லையென்றால் படத்தின் காமெடி மக்களை அதிக அளவில் கவர்ந்திருக்கும். அப்படிப்பட்ட காமெடிக்கு பெயர் போன வடிவேலு 90ஸ் காலத்தில் கவுண்டமணி, செந்தில் ஆகியோரை தூக்கி சாப்பிட்டு முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தார். இவர் பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருந்தாலும், இவரின் காமெடி கதாபாத்திரத்திற்கு என்று தனி மவுசு இருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் அவரின் வெற்றிக்கு பிள்ளையார் சுழி போட்ட கதாபாத்திரத்தில் சூனா பானா ஒன்று என்று சொல்லலாம். அதாவது கடந்த 1998 ஆம் ஆண்டு வெளியான கண்ணாத்தாள் திரைப்படத்தில் தான் சூனா பானா என்ற கேரக்டர் உருவாகியது. இப்படத்தின் ஒரு சில காமெடி சீன்களால் படம் தியேட்டரில் வசூலை வாரி குவித்தது. அந்த காட்சிகளில் ஒன்றான, ஒருவர் சாவதற்கு என்று விஷத்தை கலந்து வைத்திருக்கும் சரக்கை வாங்கி குடிப்பது, மனைவி கள்ளு இருக்கு மாவு இல்ல, அப்ப கஞ்சியாச்சும் ஊத்துடி வெண்ண மவளே என்ற சீனும் படத்தை வேற லெவலுக்கு எடுத்து சென்றது.

40 வயசுல மாஸ் பாடலுக்கு ஆட்டம் போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்.., இது உங்களுக்கே ஓவரா இல்ல!!!

அப்பேற்பட்ட படத்தை இயக்கியவர் குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சூனா பானா கதாபாத்திரத்தை உருவாக்கியது வேற யாரும் இல்லை, சன் டிவி சேனலில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் சீரியலில் கோவை சுப்பையா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பாரதி கண்ணன் தான். மேலும் இவர் இப்படத்தில் வடிவேலு விஷயத்தை வாங்கி குடிக்கும் காட்சியில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here