உதயநிதி ஸ்டாலின் ” கலகத் தலைவன் ” இசை வெளியீட்டு விழா.., எங்கு, எப்போது தெரியுமா?

0
உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் " கலகத் தலைவன் " இசை வெளியீட்டு விழா.., எங்கு, எப்போது தெரியுமா?

நெஞ்சுக்கு நீதி படத்தை தொடர்ந்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்த “கலகத் தலைவன்” படத்தை குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் உதயநிதி ஸ்டாலின்:

தற்போது அரசியல் பிரமுகராகவும், சினிமாவில் ஒரு நடிகராகவும் ஜொலிப்பவர் தான் நடிகர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

சந்தியாவின் உயிருக்கு வர இருக்கும் பேராபத்து.., தவறாக புரிந்துகொள்ளும் செந்தில் அர்ச்சனா.., சூடுபிடிக்கும் ராஜா ராணி 2!!

இப்படத்தை தொடர்ந்து கலகத் தலைவன் படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கிய இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இது தவிர கலையரசன், பிக்பாஸ் ஆரவ் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் கலகத்தலைவன் படத்தின் இசை வெளியிட்டு விழா தேதி குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் நாளை (10.11.2022) மாலை 6.30 மணிக்கு இசை வெளியிட்டு விழா நடைபெற இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இப்படத்தின் ட்ரைலரும் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் ஃப்ர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here