தளபதி விஜய்யின் “LEO” படத்தில் இணைந்த பிரபல நடிகை… அவரே வெளியிட்ட பதிவு!!

0
தளபதி விஜய்யின்
தளபதி விஜய்யின் "LEO" படத்தில் இணைந்த பிரபல நடிகை... அவரே வெளியிட்ட பதிவு!!

தளபதி விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தில் மேலும் ஒரு பிரபல நடிகை இணைந்துள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் அவரே ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

லியோ திரைப்படம்:

மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு விஜய்யுடன் லியோ என்ற படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளார் லோகேஷ் கனகராஜ். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து லியோ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நாளை முதல் சென்னையில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த படப்பிடிப்பை முடிந்தவுடன் ஹைதராபாத்திற்கு படக்குழுவினர் செல்ல திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதுபோக இப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், ஏஜென்ட் டீனா, பிக்பாஸ் ஜனனி நடித்து வரும் நிலையில் அவர்களுடன் இணைந்து ஃபகத் ஃபாஸிலும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் மேலும் ஒரு பிரபலம் இணைந்திருப்பதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் மூலம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு., பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!!

அதாவது விக்ரம் திரைப்படத்தில் ஃபகத் ஃபாஸிலுக்கு ஜோடியாக நடித்த நடிகை காயத்ரி லியோ படத்தில் இணைந்துள்ளார். அந்த பதிவில் கூறியிருப்பதாவது, சகோதரர் லோகேஷ் கனகராஜ் சகோதரருக்கு நன்றி, நடிகர் விஜய் சாருடனான லியோ கனவு நனவாகி விட்டதற்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். கண்டிப்பாக இது LCU தான் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here