சர்சையில் சிக்கிய தளபதி .., அபராதம் விதித்த காவல்துறை..,எல்லாத்துக்கும் காரணம் யார் தெரியுமா?

0
சர்சையில் சிக்கிய தளபதி .., அபராதம் விதித்த காவல்துறை..,எல்லாத்துக்கும் காரணம் யார் தெரியுமா?
சர்சையில் சிக்கிய தளபதி .., அபராதம் விதித்த காவல்துறை..,எல்லாத்துக்கும் காரணம் யார் தெரியுமா?

நடிகர் விஜய் பயன்படுத்தும் காரால் அவருக்கு வந்த புதிய பிரச்சனை குறித்து முக்கிய தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்:

கோலிவுட் வட்டாரங்களில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தில் இருக்கும் நிலையில், இப்பொழுது டப்பிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் பொங்கலுக்கு திரை காண இருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஜய் மீது மோட்டார் வாகன திருத்த சட்டத்தின் அடிப்படையில் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது

அதாவது சமீபத்தில் நடிகர் விஜய் பனையூரில் இருக்கும் மக்கள் இயக்க நிர்வாகிகளை நேரில் சந்திக்க காரில் சென்ற போது, அவரின் ரசிகர்கள் பலரும் அவரை பின் தொடர்ந்து வீடியோ எடுத்து அதை இணையத்தில் பதிவிட்டனர். அதன் பின்னர் அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக தொடங்கியது.

இனியா – ராதிகா இடையே வெடித்த உச்சகட்ட சண்டை.., அல்லோல்படும் கோபி.., பாக்கியலட்சுமி ப்ரோமோ!!

அதுமட்டுமின்றி விஜய் வந்த காரில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டி இருப்பது சட்டப்படி குற்றம் என்று நெட்டிசன்கள் பலரும் கருத்து பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் மோட்டார் வாகன சட்டப்படி நடிகர் விஜய்க்கு போக்குவரத்து காவல்துறை ரூ 500 அபராதம் விதித்தது. இந்த தகவலை அறிந்த விஜய் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here