பாலியல் சர்ச்சை நடிகருடன் ஜோடி போடும்  நடிகை தமன்னா – விளாசி தள்ளும் நெட்டிசன்கள்!!

0
பாலியல் சர்ச்சை நடிகருடன் ஜோடி போடும்  நடிகை தமன்னா - விளாசி தள்ளும் நெட்டிசன்கள்!!

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் தமன்னா, மலையாளத்தில் சர்ச்சை நடிகர் ஒருவரின் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

சர்ச்சை நாயகருடன் தமன்னா:

தமிழில் கேடி என்ற படத்தின் மூலம், மிரட்டல் வில்லியாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த கல்லூரி, வியாபாரி, பையா, வீரம் உள்ளிட்ட அனைத்து படங்களும் பெரிய அளவில் பேசப்பட்டது. நடிகர் விஜய், அஜித், பிரபுதேவா, தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட  பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பிஸியான நடிகையாக திகழ்ந்து வந்தார். மலையாளத்தில் இதுவரை நடிக்காத தமன்னா, அருண் கோபி இயக்கும் அவரது 147 வது படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக  மலையாள நடிகர் திலீப் கமிட் ஆகியுள்ளார்.

இதற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.   நடிகர் திலீப் ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கி திணறி வரும் நிலையில், தமன்னா அவருடன் நடிப்பதை அவரது ரசிகர்கள் கண்டித்துள்ளனர். உங்களுக்கு வேற ஆள் கிடைக்கவில்லையா? என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here