சிகிச்சைக்கு பின் நாடு திரும்பும் நடிகர் டி. ராஜேந்தர் – சென்னை வந்ததும் முதல் வேலை இதுதான்!!

0
உடல்நிலை சரியில்லாத போதும் டி. ராஜேந்தர் செய்த நெகிழ்ச்சி செயல் - வைரலாகும் வீடியோ!!
 சிகிச்சைக்கு பின் நாடு திரும்பும் நடிகர் டி. ராஜேந்தர் - சென்னை வந்ததும் முதல் வேலை இதுதான்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும், இயக்குனருமான நடிகர் டி.ராஜேந்தர், அமெரிக்காவில் இருந்து பூரண நலம் பெற்று, வருகிற ஜூலை 22ம் தேதி இந்தியா திரும்ப உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்தியா திரும்பும் நடிகர்:

உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 14ஆம் தேதி, மேல் சிகிச்சைக்காக நடிகர் டி.ராஜேந்தர் அமெரிக்கா சென்றார். வயிற்றில் இவருக்கு இரத்த கசிவு ஏற்பட்டதால், இவருக்கு உயர்சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்ற மருத்துவரின் அறிவுரையினால் இவர் அமெரிக்காவில் நியூயார்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஒரு மாதத்திற்கு மேலாக இவரது மனைவி மற்றும் இவரது மகன் குறளரசன் ஆகியோர் இவருடன் தங்கி இருந்தனர். தற்போது பூரண நலம் பெற்று, டி. ராஜேந்தர் ஜூலை 22 ஆம் தேதி சென்னை திரும்ப உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இவர் சென்னை வந்ததும் உடனடியாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து, தனக்கு மருத்துவ உதவி செய்ததற்காக நன்றி தெரிவிக்க  உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இவர் வருகையை கொண்டாட இவரது ரசிகர்கள் தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here