எனக்குள் நம்பிக்கையை தூண்டியது நீங்கள் தான்.., சித்திக் மறைவு குறித்து நடிகர் சூர்யா உருக்கம்!!

0
எனக்குள் நம்பிக்கையை தூண்டியது நீங்கள் தான்.., சித்திக் மறைவு குறித்து நடிகர் சூர்யா உருக்கம்!!
எனக்குள் நம்பிக்கையை தூண்டியது நீங்கள் தான்.., சித்திக் மறைவு குறித்து நடிகர் சூர்யா உருக்கம்!!

பிரபல இயக்குனர் சித்திக் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்த நிலையில் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் சித்திக்கை குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் சித்திக் சார் உங்கள் இறப்பால் என் மனம் கணமாகியுள்ளது. உங்கள் இழப்பை என்னால் ஈடுசெய்ய முடியாது. உங்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல். உங்களுக்கு நான் ஒரு படம் நடித்தாலும் தற்போது வரை அது எனக்கு நல்ல நினைவுகளாக இருந்து வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

பிரண்ட்ஸ் படத்தில் நான் சிறிய காட்சிகளில் நடித்தாலும் கூட என்னை ஊக்குவித்து கொண்டே இருந்தீர்கள். சிறிதளவு கூட யாரு மேலையும் கோபம் கொள்ளாமல் அனைவரையும் சமமாக நடத்தினீர்கள். மேலும் என்னுடைய திறமையை நான் நம்ப வேண்டும் என்று எனக்கு கற்று கொடுத்தீர்கள்.அதனால் தான் நான் இந்த அளவுக்கு உயர்ந்து நிற்கிறேன். மிஸ் யூ சார். நீங்கள் எனக்கு கொடுத்த அன்பும் அக்கறையும் என்னை முன்னோக்கி கொண்டு செல்லும் என நடிகர் சூர்யா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

விவாகரத்திற்கு பிறகு மீண்டும் இணைந்த தனுஷ்-ஐஸ்வர்யா ஜோடி.., என்ன நடந்துச்சு தெரியுமா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here