நடிகர் சூர்யாவுக்கு வந்த புதிய பிரச்சனை – ஒரு போஸ்டர் வச்சு இப்படி ஜோலிய முடிச்சுட்டீங்களே!!

0
சூர்யாவுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்., 3 தமிழ் படங்கள் பெற்ற தேசிய அளவிலான பெருமை!!
சூர்யாவுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்., 3 தமிழ் படங்கள் பெற்ற தேசிய அளவிலான பெருமை!!

நடிகர் சூர்யா, தனது பிறந்த பிறந்த நாளை அண்மையில் கொண்டாடிய நிலையில், அவருக்காக ஒட்டப்பட்ட போஸ்டர்  தற்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சை போஸ்டர்:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இது போக, இவர் நடித்த சூரரைப்போற்று படம் 5 தேசிய விருதுகளை வாங்கிக் குவித்தது. இந்த நிலையில், நடிகர் சூர்யா தனது பிறந்த நாளை கடந்த மாதம் 23ம் தேதி கொண்டாடினார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அவருக்காக அவருடைய ரசிகர்கள் பிரம்மாண்டமான பேனர்கள் வைத்தனர். இந்த நிலையில் மணப்பாறையில் இருந்து மதுரை செல்லும் சாலையில்  பெண்களின் கனவு கணவனே சூர்யா என அச்சடிக்கப்பட்ட பேனரை வைத்திருந்தனர். இதற்கு,  பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது வரை அந்த பேனர் அதே இடத்தில் இருப்பதால், அந்த பக்கம் செல்லும் பலரும் அந்த பேனரை பார்த்து முகம் சுளித்து செல்கின்றனர். இந்த செய்தி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here