அட்ரா சக்க.., “கங்குவா” படத்திற்காக புதிய அவதாரம் எடுக்கும் நடிகர் சூர்யா.. வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!

0
அட்ரா சக்க..,
அட்ரா சக்க.., "கங்குவா" படத்திற்காக புதிய அவதாரம் எடுக்கும் நடிகர் சூர்யா.. வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்கு இணையாக ரசிகர்களை வைத்திருப்பவர் தான் நடிகர் சூர்யா. இவர் கடைசியாக நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் தற்போது வரை ஏக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அந்த கேரக்டர் 5 நிமிடம் வந்தாலும் அனைவருக்கும் புல்லரித்து விட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தற்போது இவர்  சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில், பாலிவுட்டில் நடிகை திஷா பதானி, மிருணால் தாகூர், யோகி பாபு ஆகியோர் முக்கியமான ரோலில் நடித்து வருகின்றனர்.

தமிழக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சூப்பர் ஏற்பாடு., அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!!

மேலும் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் கதைக்களம் கொண்ட இப்படத்திற்காக நடிகர் சூர்யா கடுமையாக உடற்பயிற்சி செய்து வருவதாகவும், இதுவரை சூர்யாவை ரசிகர்கள் பார்க்காத அளவுக்கு அவருடைய கெட்டப் இருப்பதாக வலைபேச்சு அந்தணன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி சூர்யாவின் கெரியரில் அதிகமான பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படம் என்றால் அது கங்குவா தான். அதனால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here