சூர்யாவிடம் மன்னிப்பு கேட்ட கமல் – ஓ..எல்லாம் இதுக்காக தானா! வைரலாகும் ட்விட்டர் பதிவு!!

0
சூர்யாவிடம் மன்னிப்பு கேட்ட கமல் - ஓ..எல்லாம் இதுக்காக தானா! வைரலாகும் ட்விட்டர் பதிவு!!
சூர்யாவிடம் மன்னிப்பு கேட்ட கமல் - ஓ..எல்லாம் இதுக்காக தானா! வைரலாகும் ட்விட்டர் பதிவு!!

விக்ரம் படம் குறித்து, நடிகர் சூர்யா பதிவிட்ட ட்விட்டர் கருத்துக்கு உலக நாயகன் கமல் பதில் முக்கிய கருத்து சோசியல் மீடியாவில் வைரலாகி உள்ளது.

வைரல் கருத்து :

கமல் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உருவாகி உலகம் முழுவதும் நேற்று வெளியான  திரைப்படம் விக்ரம். ரசிகர்கள் மத்தியில், மிகப் பெரிய அளவில் ரீச் அடைந்துள்ள இந்த படம் வசூலில் புதிய சாதனை படைத்து வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் சூர்யா இணைந்திருப்பது, ரசிகர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய ட்ரீட் என பலரும் பேசி வருகின்றனர். இந்த நிலையில் படம் குறித்து முக்கிய பதிவு ஒன்றை சூர்யா வெளியிட்டுள்ளார்.

அதாவது கமல் அண்ணா, இதை எப்படி சொல்வதென்று தெரியவில்லை, உங்களோடு பணியாற்றிய இந்த அனுபவம் வேற லெவல் என்றும், இந்த வாய்ப்பிற்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள நடிகர் கமல், உங்கள் மீது நிறைய பேர் அன்பு வைத்திருக்கிறார்கள் என்றும், அந்த அன்பு தற்போது மீண்டும் அதிகரித்துள்ளதாகவும்  பதிவிட்டுள்ளார். இது போக, உங்களுக்கு வாழ்த்துக்கள் என் தம்பி.. மன்னிக்கவும் தம்பி சார் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரல் ஆகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here