இதை தவிர வேறு எதையும் என்னால் சொல்ல முடியாது – ஜெய்பீம் படம் குறித்து நடிகர் சூர்யா கருத்து!!

0

ஜெய்பீம் படத்திற்கு வார்த்தைகளால் சொல்ல முடியாத ஆதரவை கொடுத்து வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

ஜெய்பீம்:

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் ஞானவேல் ராஜா இயக்கத்தில் உருவாகி அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ஜெய்பீம்.  விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை இந்த திரைப்படம் பெற்றுள்ளது. இந்த படத்தை பார்த்த முதல்வர் ஸ்டாலின் மற்றும் பல அரசியல் கட்சி தலைவர்கள் நடிகர் சூர்யாவுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஆனால், வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் இந்த படத்தில் இழிவுபடுத்தப்பட்டுள்ளதாக அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். மேலும், நடிகர் சூர்யாவிடம் ஐந்து கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனால், இதை எதிர்த்து பலரும் சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.  இதை பார்த்த சூர்யா, நீங்கள் கொடுக்கும் இந்த அபரிமிதமான உறுதுணக்கு நன்றி சொல்வதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here