நடிகர் சூர்யாவை எட்டி உதைப்பவருக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு – சித்தமல்லி பழனிசாமி சர்ச்சை கருத்து!!

0

நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய்பீம் திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளில்,  இறந்த தங்கள் கட்சி நிர்வாகி ஒருவர் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளதால், இதற்கு காரணமாக இருந்த சூர்யாவை தாக்குபவருக்கு ஒரு லட்சம் என பாமக மாவட்ட செயலாளர் சர்ச்சையான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

ஒரு லட்சம் பரிசு:

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் ஞானவேல் ராஜா இயக்கத்தில் உருவாகி அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ஜெய்பீம்.  வெளியான நாள் முதல் இந்த படம் பல்வேறு தரப்பினருடைய வரவேற்பை பெற்றுள்ளது.  முதல்வர் ஸ்டாலின் மற்றும் பல அரசியல் கட்சி தலைவர்களின் ஏகோபித்த வரவேற்பை இந்த திரைப்படம் பெற்றுள்ளது.  இதே போல், ஒரு சிலரிடம் இந்த திரைப்படம் எதிர்ப்பையும் பெற்றுள்ளது.

அதாவது, மயிலாடுதுறையை சார்ந்த அரசியல் கட்சி தலைவர் சித்தமல்லி பழனிச்சாமி இந்த திரைப்படம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்த படத்தில், மறைந்த தங்கள் கட்சி நிர்வாகி ஒருவர் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளதால், இதற்கு காரணமாக இருந்த நடிகர் சூர்யாவை தாக்குபவருக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ஆனால், பொது மக்கள் இது தேவையற்ற பேச்சு என அரசியல் தலைவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here