புத்தகமாக வெளியாகும் சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம்.., படக்குழுவினர் அறிவிப்பு!!

0
புத்தகமாக வெளியாகும் சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம்.., படக்குழுவினர் அறிவிப்பு!!
புத்தகமாக வெளியாகும் சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம்.., படக்குழுவினர் அறிவிப்பு!!

நடிகர் சூர்யா நடித்த ஜெய் பீம் படத்தை குறித்து சமூக வலைத்தளங்களில் ஒரு முக்கிய தகவல் தீயாய் பரவி வருகிறது.

ஜெய் பீம்:

சினிமா வட்டாரங்களில் மிக அழுத்தமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் தான் நடிகர் சூர்யா. அந்த வகையில் இவர் நடித்த சூரரை போற்று , ஜெய் பீம் போன்ற திரைப்படங்கள் வெற்றி படங்களாக அமைந்தது . இதில் சூரரை போற்று திரைப்படம் பல விருதுகளை வென்றது. அதே போல ஜெய் பீம் திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தை தழுவிய திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று சாதனை படைத்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இயக்குனர் ஞானவேல் படைப்பில் உருவான இந்த படத்தில் நடிகர் சூர்யா, லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன், ராஜீஷா விஜயன் போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் இடம்பெற்ற எல்லா பாடல்களும் ரசிகர்களின் கண்களை கலங்க வைக்கும் விதமாக இருந்தது.

சிரிப்பு, சந்தோசம் எல்லாமே போச்சு., நடக்கக்கூட தெம்பில்லாமல் போன சமந்தா! என்ன இப்படி ஆயிட்டீங்க!!

அந்த வகையில் தலைகோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும் என்ற பாடலை சமீபத்தில் காவலாளி ஒருவர் மெய்மறந்து பாடிய வீடியோ வைரலாக பரவி வந்தது. இப்படம் வெளியாகி ஒரு ஆண்டுக்கு மேல் ஆன நிலையில் தற்போது ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் சூர்யா நடித்த ஜெய் பீம் படத்தின் திரைக்கதையை புத்தகமாக வெளிவர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் நாளை நடக்க இருக்கும் புத்தகக் காட்சியில் புத்தகத்தை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here