தீவிர உடற்பயிற்சியில் நடிகர் சூர்யா…..,ஒருவேளை அதுக்காக இருக்குமோ…,

0
தீவிர உடற்பயிற்சியில் நடிகர் சூர்யா.....,ஒருவேளை அதுக்காக இருக்குமோ...,
தீவிர உடற்பயிற்சியில் நடிகர் சூர்யா.....,ஒருவேளை அதுக்காக இருக்குமோ...,

நடிகர் சூர்யா ‘ஜெய்பீம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 3D தொழில்நுட்பத்தில் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்தியாவில் உள்ள 10 மொழிகளில் வெளியாக இருக்கும் ‘கங்குவா’ திரைப்படத்திற்கான கொடைக்கானல் படப்பிடிப்பு ஷெட்யூல் சமீபத்தில் முடிவு பெற்றது.

‘பொன்னியின் செல்வன்’ பூங்குழலியின் கிரிக்கெட் காதலர்…..,என்னப்பா சொல்றீங்க….,

இந்நிலையில், நடிகர் சூர்யா தனது கட்டுக்கோப்பான உடலுடன் ஜிம்மில் வைத்து கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது. இந்த பயிற்சி ‘கங்குவா’ திரைப்படத்திற்கானதாக இருக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here