தன் மனைவி, குழந்தைகளுக்காக நடிகர் சூர்யா செய்த காரியம் – எவ்வளவு பெரிய ஆள் நீங்க இப்படி பண்ணிட்டிங்களே!

0

நடிகர் சூர்யா தனது கையில் தனது மனைவி ஜோதிகா மற்றும் தனது குழந்தை தியா தேவ் ஆகியோரது பெயர்களை மருதாணியில் எழுதியுள்ளது பலரையும் வியக்கவைத்துள்ளது. இவ்வளவு பெரிய நடிகராக இருந்தும் தனது குடும்பத்தின் மீது இவர் வைத்திருக்கும் பற்று பலரையும் பாராட்டவைத்துள்ளது.

சூர்யா கையில் பெயர் :

தமிழ் திரை உலகத்தில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி வைத்து இருப்பவர் நடிகர் சூர்யா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. சிறந்த சமூக செயற்பாட்டாளரான இவர் பல குழந்தைகளின் வாழ்க்கையில் கல்வி விளக்கை ஏற்றி வைத்து வருகிறார். நடிகை ஜோதிகாவை இவர் திருமணம் செய்துள்ளார்.

அதேபோல, தனது 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தின் வாயிலாக பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். இந்த நிலையில் அவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. இவர் தனது கையில், தனது மனைவி ஜோதிகா மற்றும் தனது குழந்தை தியா தேவ் ஆகியோரது பெயர்களை மருதாணி கோன் மூலம் இட்டுக் கொண்டுள்ளார். தற்போது இந்த போட்டோ லைக்குகளை குவித்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here