நடிகர் சூர்யா பெயரில் போலி அறிக்கை ரீலிஸ் –  வழக்கு போடாம சும்மா விட மாட்டேன் என ஆவேசம்!!

0

நடிகர் சூர்யா பெயரை பயன்படுத்தி, 27% இட ஒதுக்கீடு குறித்து போலி அறிக்கை வெளியிட்ட நபர் மீது சூர்யா தயாரிப்பு நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க போவதாக அறிவித்துள்ளார்.

சூர்யா வழக்கு :

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள  நடிகர் சூர்யா ஜெய்பீம் படத்தின் மூலம் ஏராளமான சர்ச்சையை சந்தித்தார். இதையடுத்து, தற்போது எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில்  நடித்து வருகிறார். இந்த நிலையில், ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அரசியல் கட்சிகள் வரவேற்று அறிக்கை வெளியிட்டது. இதேபோல், நடிகர் சூர்யா சார்பிலும் இந்த தீர்ப்பு வரவேற்கப்படுவதாக அறிக்கை வெளியானது.

அந்த அறிக்கையில், உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், இதற்காகப் போராடிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாகவும், இதன் மூலம் கொங்கு நாட்டைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்விக் கனவு நனவாகும் என்றும்  குறிப்பிடப்பட்டு இருந்தது. சூர்யாவின் கையெழுத்து இடம்பெற்றிருந்த, இந்த அறிக்கை, தற்போது போலியானது என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அப்படிப்பட்ட போலி அறிக்கை வெளியிட்ட நபர் மீது சூர்யா வழக்கு தொடுக்க உள்ளதாக அவரது தயாரிப்பு நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here