நடிகர் சூர்யா மகள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை – டபுள் சந்தோசத்தில் மூழ்கிய நடிகர் குடும்பம்!!

0
சூர்யாவுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்., 3 தமிழ் படங்கள் பெற்ற தேசிய அளவிலான பெருமை!!
சூர்யாவுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்., 3 தமிழ் படங்கள் பெற்ற தேசிய அளவிலான பெருமை!!

நடிகர் சூர்யா மகள் தியா பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், 500க்கு 487 மதிப்பெண்கள் பெற்று, முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்துள்ளார். இதனால் அவர் மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் உள்ளது.

 மகிழ்ச்சியில் குடும்பம் :

கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் தனது சக நடிகையான ஜோதிகாவை கடந்த 2006 ஆம் ஆண்டு, காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தியா எழுதினார்.

நேற்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், சூர்யா மகள் தியாவின் மதிப்பெண், தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது, அவர் தமிழில் 95, ஆங்கிலத்தில் 99, கணிதத்தில் 100, அறிவியல் 98, சமூக அறிவியல் 95 என ஆக மொத்தம் 487 மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்துள்ளார்.

இதனால்,சூர்யா குடும்பம் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். அதுபோல சூர்யாவின் அகரம் அறக்கட்டளை மூலம், கல்வி உதவித்தொகை பெற்று படித்து வந்த பலரும் இந்த பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளதால், நடிகர் சூர்யாவின் மொத்த குடும்பமும் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ரசிகர்கள் நடிகர் சூர்யா மகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here