பிரம்மாண்டம் காட்டும் பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா.., Chief Guest இவர் தானா??

0
பிரம்மாண்டம் காட்டும் பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா.., Chief Guest இவர் தானா??
பிரம்மாண்டம் காட்டும் பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா.., Chief Guest இவர் தானா??

நடிகர் சிம்பு நடித்த பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா கலந்து கொள்ள இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

பத்து தல

தமிழ் திரையுலகில் நடிகர், பாடகர், பாடலாசிரியர் மற்றும் இயக்குனர் என பன்முகத் திறமைகளை கொண்டு விளங்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகர் சிம்பு. கடந்த சில வருடங்களாக வெற்றி படங்களை கொடுக்க முடியாமல் திணறி வந்த சிம்பு தற்போது அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு என்ற இரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை தேடி தந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் பத்து தல படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில் அடுத்த கட்ட பணிகளில் படக் குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இப்படத்தின் டீசர் என்று வெளியாகிறது. அதுமட்டுமின்றி பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா இம்மாதம் இறுதி வாரத்தில் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் சிம்பு தனது ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதுனால தான் விஜய் Real Heroவா இருக்காரு.., மேடையில் LEO பட அப்டேட்டை கொடுத்த மிஷ்கின்!!

இந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவிற்கு பிரபல நடிகர் கலந்து கொள்ள இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் சிம்பு நடிக்கும் பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு நடிகர் சூர்யா கலந்து கொள்வார் என்று இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. நடிகர் சூர்யா தற்போது நடித்து வரும் சூர்யா 42 படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். இதனால் சூர்யா கலந்து கொள்வார் என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர்.மேலும் இப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here