
விடுதலை படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தை குறித்து மேடையில் நடிகர் சூரி பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
நடிகர் சூரி:
தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து, தற்போது காமெடியில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் நடிகர் சூரி. தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். நேற்று படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது மேடையில் நடிகர் சூரி, ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து பேசியுள்ளார்.அதாவது அவர் பேசியதாவது, என்னை பார்க்க வேண்டும் என்று ஒரு வயதான பாட்டி ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு 10 நாட்களுக்கு மேல் வந்து சென்றுள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஆனால் கடைசி வரை அந்த பாட்டியை என்னால் பார்க்க முடியாமல் போனது. ஒரு நாள் ஒளிப்பதிவாளர் வேல் ராஜ் என்னிடம் அந்த பாட்டியின் வீடு பக்கத்தில்தான் இருப்பதாகவும், நேரில் சென்று ஆசீர்வாதம் வாங்கி விடுங்கள் என்று சொன்னார். அதனை தொடர்ந்து உதவி இயக்குனர்கள் என்னை அந்த பாட்டியின் வீட்டிற்கு அழைத்து சென்றார்கள். அப்போது அந்த பாட்டி சாப்பிட்டு கொண்டிருந்த போதும் நான் வந்திருக்கிறேன் என்று தெரிந்ததும் சாப்பிட்ட தட்டை கீழே வைத்து ஓடி வந்து என்னை ஆரத்தழுவி வரவேற்றார்.
உயிரோடு இருக்கும் போதே தனக்கு சமாதி கட்டிக்கொண்ட நாயகி ரேகா.., அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!!
நான் உன் அப்பாவோட பெரிய fan என்று கூறினார். அதற் கேட்டதும் எனக்கு கொஞ்சம் குழப்பமாக இருந்தது. யாரை சொல்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் சிவக்குமார் மகன் தான நீ என்று கேட்டார். ஐயோ பாட்டி நான் சூர்யா சார் இல்லை என்று சொன்னேன். உடனே கதவை சடார் என்று கதவை சாத்தி விட்டார் என்று காமெடியாக கூறினார். தற்போது அவர் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.