பல நஷ்டங்களுக்கு பிறகும் சூரிக்கு அடித்த லாட்டரி.., இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!!

0
பல நஷ்டங்களுக்கு பிறகும் சூரிக்கு அடித்த லாட்டரி.., இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!!
பல நஷ்டங்களுக்கு பிறகும் சூரிக்கு அடித்த லாட்டரி.., இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!!

நடிகர் சூரி நடிக்கும் விடுதலை படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் தற்போது பிரபல இயக்குனர் படைப்பில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நடிகர் சூரி:

கோலிவுட் வட்டாரங்களில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் தான் பரோட்டா சூரி. இவர் நடிப்பில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இதைத்தொடர்ந்து விஜய், அஜித், ரஜினி, போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் காமெடி நடிகராக நடித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில், சூரி அடுத்த படத்தில் கதாநாயகனாக நடிக்க பிரபல இயக்குனருடன் கமிட் ஆகியுள்ளார்.

படவாய்ப்பிற்காக மோசமான காரியத்தை செய்த ரம்யா பாண்டியன்.., அதுக்குன்னு இப்படியா?? கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

அதாவது மதயானை கூட்டம், ராவணன் கோட்டம் மற்றும் தேரும் போரும் போன்ற படங்களை இயக்கிய விக்ரம் சுகுமாரனின் அடுத்த படைப்பில் நடிகர் சூரி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் அவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here