நடிகர் சூரிக்கு ஆப்பு வைத்த வணிகவரித்துறை – புகாருக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவு!!

0
நடிகர் சூரிக்கு ஆப்பு வைத்த வணிகவரித்துறை - புகாருக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவு!!

தமிழ் சினிமாவின் காமெடி நடிகரான சூரிக்கு சொந்தமான மதுரையில் அமைந்துள்ள அம்மன் உணவகத்தில், வணிக வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

வணிகவரித்துறை உத்தரவு:

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் பரோட்டா சூரி. வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம், திரையுலகில் மிகப்பெரிய அளவில் ரீச்சான இவர் தற்போது நடிகராக நடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார். தற்போது விடுதலை என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவருக்கு சொந்தமான அம்மன் உணவகம் மதுரையில் இயங்கி வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த உணவகம், நகரின் புகழ்பெற்ற உணவகங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. சமீப காலமாக இந்த உணவகத்தில், ஜிஎஸ்டி இல்லாமல் உணவிற்கான கட்டணம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து வணிக வரித்துறை அதிகாரிகள் அந்த உணவகத்தில் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

ஷூட்டிங்கே முடியல .., அதுக்குள்ள இத்தனை கண்டிஷன் போட்ட ரஜினி.., நெல்சனுக்கு விழுந்த பேரிடி!!

இந்த, புகாருக்கு இன்னும் 15 நாட்களில் சூரி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளனர். நடிகர் சூரிக்கு சொந்தமான இந்த உணவகத்தில் சோதனை நடத்தப்பட்டிருப்பது, சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here