வெற்றிமாறனின் விடுதலை படத்தின் டப்பிங் பணிகள் ஸ்டார்ட்.., படக்குழுவினர் அறிவிப்பு!!

0
வெற்றிமாறனின் விடுதலை படத்தின் டப்பிங் பணிகள் ஸ்டார்ட்.., படக்குழுவினர் அறிவிப்பு!!
வெற்றிமாறனின் விடுதலை படத்தின் டப்பிங் பணிகள் ஸ்டார்ட்.., படக்குழுவினர் அறிவிப்பு!!

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்து வரும் விடுதலை படத்தை குறித்து இணையத்தில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

விடுதலை படம்:

கோலிவுட் சினிமாவில் ரசிகர்களுக்கு பிடித்த இயக்குனர்களின் பேவரைட் லிஸ்ட்டில் முதலாவதாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் வெற்றிமாறன். இவர் படைப்பில் உருவான ஒவ்வொரு திரைப்படமும் தேசிய விருது பெற்று சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் இவர் இயக்கிய அசுரன், பாவக்கதைகள் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூலிலும் அதிக கல்லா கட்டியது. தற்போது காமெடி நடிகர் சூரியை ஹீரோவாக வைத்து விடுதலை படத்தின் பாகம் 1 யை எடுத்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதுபோக விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க, கௌதம் மேனன் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், தற்போது அடுத்த கட்ட பணிகளில் பிஸியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் விடுதலை படத்தை குறித்து நடிகர் விஜய் சேதுபதி ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

அர்னவால் வாழ்க்கையை இழந்த திவ்யா ஸ்ரீதருக்கு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.., கண்கலங்கி அவரே வெளியிட்ட பதிவு!!

அதாவது சூரி ஹீரோவாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் வைத்து வெற்றிமாறன் இயக்கி வரும் விடுதலை படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி விட்டது என்று விஜி விஜய் சேதுபதி வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது. மேலும் கூடிய விரைவில் இந்த திரைப்படம் வெளியாகலாம் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here