நடிகர் சோனு சூட்டின் தொடரும் அறப்பணிகள் – பெங்களூருவில் 30 நோயாளிகளின் உயிர் பாதுகாப்பு!!

0

பிரபல நடிகரான சோனு சூட் கடந்த ஆண்டு கொரோனா காலத்தில் இருந்தே ஏழை எளிய மக்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்து வருகிறார். தற்போது வரை அவரது அறப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சோனு சூட்:

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனாவின் தாக்கம் கண்டறியப்பட்டு வருகிறது. இதனால் பல தரப்பு மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை துளைத்து அன்றாட உணவிற்கு சிரமப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு உதவி செய்யும் வகையில் பிரபல நடிகரான சோனு சூட் கடந்த ஆண்டு முதல் தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார். இவர் சினிமாவில் வில்லனாக நடித்தாலும் நிஜ வாழ்க்கையில் ஹீரோ தான்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இவர் மக்களுக்கு உதவி செய்வதற்காக தனது சொத்துக்களை வங்கியில் அடமானம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது செயல் பல தரப்பினரால் பாராட்டப்பட்டது. மேலும் சில வாரங்களுக்கு முன்பு நடிகர் சோனு சூட்டிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த நேரத்தில் கூட அவர் மக்களுக்கு தக்க உதவிகளை செய்து வந்தார். மேலும் மக்களுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் மற்றும் உணவு வசதியை செய்து வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஊடகதுறையினர் மற்றும் அவரது குடும்பங்களுக்கு இலவச கொரோனா சிகிச்சை – மாநில முதல்வர் அதிரடி!!

தற்போது அந்த வகையில் பெங்களூரு மருத்துவமனையில் ஏற்பட்ட விபரீதத்தையும் இவரால் தடுக்கப்பட்டுள்ள்ளது. பெங்களூரு மருத்துவமனையில் ஆக்சிஜன் பிரிவில் கசிவு ஏற்பட்டது. இதனை கண்டறியப்பட்ட பொழுது 30 நோயாளிகள் ஆக்சிஜன் சிகிச்சை மேற்கொண்டு இருந்தனர். அந்நேரத்தில் போலீஸ் மற்றும் சோனு சூட்டின் அறக்கட்டளை உறுப்பினர்கள் தக்க நிறத்தில் உதவியை மேற்கொண்டனர். இதற்கு அனைத்து தரப்பினரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here